Happy Birthday Modi: பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்து, இரண்டாவது முறை இந்தியப் பிரதமராக

Happy Birthday Modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்து, இரண்டாவது முறை இந்தியப் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இன்று தனது 73 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சேவா பக்வாடா திட்டம், பிரதமர் விஸ்வகர்மா கவுஷல் சம்மான் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்  தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அமைச்சரவை உறுப்பினர்களான அமித்ஷா மற்றும் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

unknown node

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி, சூரத்தில், 73 ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.