பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

Former Deputy Chief Minister O. Panneerselvam congratulated the nurses on his Twitter page.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிற நிலையில், பலரும் செவிலியர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘அன்பு, தியாகம், பொறுமை, சேவையின் திருஉருவமாக பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிரான அறப்போரில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கண்துஞ்சாது அர்ப்பணிப்போடு போராடிக் கொண்டிருக்கும் தாயுள்ளங்களாம் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுவோம்.

உலக மக்களின் உயிர்காக்க போராடும் செவிலியர்களின் சேவைகளுக்கு இவ்வுலகில் ஈடேதுமில்லை. செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி, அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நலமுடன் வாழ மனதார வாழ்த்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node