அதிமுக “சார்”களை மறந்து விட்டீரா பழனிசாமி? கடுமையாக சாடிய அமைச்சர் சிவசங்கர்!
தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், நேற்று சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.
அந்த செய்தி தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும், குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் திமுக அரசு உணர வேண்டும்.”SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்” என திமுகவை குற்றம்சாட்டி பதிவிட்டு இருந்தார்.
அதற்கு அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அதிமுக “சார்”களை மறந்து விட்டீரா பழனிசாமி? சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிபடையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர்.
மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார். “சார்”களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் “சார்”களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் “சார் யார்” என மறந்து விட்டீரா பழனிசாமி.?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் “சார் யார்” என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ’’சார் யார்’’ என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ’’சார் யார்’’ என்பது மறந்து போனதா?
நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் “அதிமுக சார்களை” மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி “சார்”களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்” எனவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.
*அதிமுக “சார்”களை மறந்து விட்டீரா பழனிசாமி?*
சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிபடையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். மாணவியின் செல்போன்…
— Sivasankar SS (@sivasankar1ss) January 27, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025