கையில் வேலினை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் – துரைமுருகன்

Default Image

மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்று திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக ஸ்டாலினுக்கு, மாலை அணிவித்து வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளி வேலுடன் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து இன்று கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் கடவுளே வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் தரமாட்டார் என முதல்வர் விமர்சனம் செய்திருந்தார்.

இதுபோல பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறுகையில், பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார். என்னதான் இரட்டை வேடம் போட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்