நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் – வைகோ

He used acting not only as a profession but also as a tool for social development.

நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதை திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் நடிகர் விவேக். நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர்.’ என தெரிவித்துள்ளார்.