#BREAKING: இன்று 13 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!

There is a possibility of heavy rain in 13 districts of Tamil Nadu today.

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனத்தால் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி,விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  நாளை நீலகிரி, கோவை, தேனி சேலம், நாமக்கல், வேலூர், விழுப்புரம் ,திருப்பத்தூரில் கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள், புதுவை காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.