தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு...வானிலை அப்டேட் இதோ!

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் , தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் பரவலாக ஜனவ 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் மழை வாய்ப்பு உள்ளது.

Weather rain tn

சென்னை :21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதைப்போல, டெல்டா வானிலை ஆய்வு வேதர்மேன் கொடுத்த தகவலின் படி, கிழக்கு திசை காற்றின் வருகை மற்றும் கிழக்கு-மேற்கு திசை காற்றின் சந்திப்பின் காரணமாக ஜனவ 25 முதல் 27 வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை திரும்பும்.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் , தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் பரவலாக ஜனவ 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் மழை வாய்ப்பு உள்ளது. கடலோரத்தின் ஒரிரு இடங்களில் கன முதல் மிககனமழை வரை பதிவாக கூடும்.

வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவாக கூடும். குறிப்பாக ஜனவ 26ம் தேதி அன்று விட்டு விட்டு மழை பதிவாகும்.

குடியரசு தின விழா அன்று சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பதிவாக கூடும். தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி,தேனி,திண்டுக்கல்,தேனி விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் ஜனவ 26 & 27 தேதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.