5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் அளித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளநிலையில், கடலூர், நாகை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தேனி,  சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.