இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தி.மலை,

Rain

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மிதமான வழக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக குடியாத்தம் 12 செ.மீ, திருவண்ணாமலை மேலாலத்தூரில் தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாமரைப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய தலா 7 செ.மீ மழை  பதிவாகியுள்ளது.