கனமழை எதிரொலி- நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து  பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்