தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் ....!

According to the Meteorological Department, heavy rains will continue in 10 districts for 5 days in Tamil Nadu.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வருகிற 7ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வங்கக்கடலில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.