அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த 3 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை..!

Ramanathapuram, Thoothukudi and Tirunelveli districts will receive heavy showers during the next 24 hours due to the rain

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி மற்றும்  தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர பகுதி பொருத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.