தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை!

Hurricane Nivar has crossed the coast, bringing heavy rains with strong winds in many parts of Tamil Nadu and Pondicherry.

நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை  கடக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.