டவ்-தே புயல் : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது.
இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தின் திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் டவ்-தே புயல் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக 150 – 160 கீ.மீ வேகத்தில் கற்றுவீசக்கூடும் என்றும், புயலின் தாக்கம் தமிழகம், மகாராஷ்ரம், கேரளா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025