கொரோனா பரவல்:தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்ற கோவை!அச்சத்தில் மக்கள்..!

Coimbatore is the second most coronavirus infected district in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டம் மாறியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் கடந்த ஒரே நாளில் 6,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து,தற்போது கோவை மாவட்டத்தில் கடந்த ஒரே நாளில் 3,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டம் மாறியுள்ளது.இதனால், அம்மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.