#BureviCyclone: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy to very heavy rainfall at a few places with isolated Extremely heavy falls very likely over south Tamilnadu

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவுபுரெவிபுயலாக வலுப்பெற்றது.தற்போது புரெவி புயல்,இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென் தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று மற்றும் நாளையும் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி.தென்காசி,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.