தலைக்கவசம் அணிவது ஸ்டைலை பாதிக்கும் விஷயம் அல்ல நம் உயிரைப் பாதுகாக்கும் விஷயம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
unknown nodeஇது குறித்து மாணவர்களிடையே பேசிய அவர் போக்குவரத்து விதிகளை வற்புறுத்தி பின்பற்ற வைக்க முடியாது அதை நம் சுய ஒழுக்கத்தின் மூலம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் பேசினார்.
unknown nodeமேலும் தலைக்கவசம் அணிவது ஸ்டைலை பாதிக்கும் விஷயம் அல்ல நம் உயிரைப் பாதுகாக்கும் விஷயம் என்று தெரிவித்தார். தலைக்கவசம் குறித்து உங்கள் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் வழங்கினார்.
இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் இருந்து துவங்கியுள்ளார் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன்.
DINASUVADU