கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
unknown nodeகார்களில் சீட் பெல்ட் அணிவதையும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும் முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இன்று இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. அதிகரித்து வரும் சாலை விபத்து மரணங்களை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
unknown nodeஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பித்த அரசாணை குறித்தும், மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து அக்டோபர் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஆணையிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU