ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை எந்த நபரும் நியமிக்க கூடாது என யர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பொதுப்பணியாளர்களை சேர்க்க ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உத்தரவு நகல் கிடைத்த 3 மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கால்நடை, மீன்வளம், பால்வள துறையின் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் மையப்படுத்தி ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு வாரியம் அமைத்து தேர்வு செய்யும் முறையின் கீழ் கூட்டுறவு சங்க பணியாளர்களையும் கொண்டு வரவேண்டும். மேலும், ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை கூட்டுறவு சங்கத்தால் எந்த நபரும் நியமிக்கப்பட கூடாது எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவன பணியாளர்கள் நியமித்தை ரத்து செய்த ஆவின் நிர்வாக உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை நமது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்பதை மறந்துவிட முடியாது. நிர்வாகம் சரியாக அமையாவிட்டால், சட்டத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிதும் பாதிக்கும். ஆவின் போன்ற கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி போல் தேர்வு நடத்தி ஒரு குடைக்குள் வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.