டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏப்ரல் 4, 5, 6ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.