தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.!

Chennai High Court Madurai branch orders the Tamil Nadu government to take action to open all libraries in Tamil Nadu.

தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம்போல இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராமப்புற நூலகங்களே மிக முக்கியமானவை என்பதால் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், கிராமப்புற நூலகங்களை விரைவாக திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரை சவுந்தர்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வண்டியூரில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்தை திறப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.