கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட் உத்தரவு!

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு.

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு.

வன்முறை மற்றும் கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்து எஸ்கேஜி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், பள்ளியை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க கோரியும், பள்ளியை முழுமையாக திறக்க கோரியும் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளையும் நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.