TNBudget2023 : முக்கிய சிறப்பம்சங்கள் உங்களுக்காக சுடச்சுட..!

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024.

தமிழக  சட்டப்பேரவையில் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். இது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 2-வது முழு பட்ஜெட் தாக்கல் மற்றும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.

தமிழக  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24க்கான பட்ஜெட் உரையின்முக்கிய சிறப்பம்சங்களைகாண்போம்.

வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம் :

தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும். வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முழுவதும் படிக்க : தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 Live : வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்..! நிதியமைச்சர்

தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு:

பட்ஜெட் உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வரும் ஆண்டில் ரூ.1,500 கோடியில் பள்ளி கல்வித்துறையில்  வகுப்பறைகள் கட்டப்படும். ரூ.110 கோடி செலவில் 4, 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : TN Buget Education: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறை ரூ.18,661 கோடி ஒதுக்கீடு!

காலை உணவு திட்டம் விரிவாக்கம்:

முதலமைச்சரின்காலைஉணவுதிட்டம் விரிவாக்கம் 500 கோடி ரூபாய் செலவில், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : Breakfast Scheme:முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 500 கோடியில் விரிவாக்கம் – நிதியமைச்சர்

மகளிர் சுய உதவி குழு கடன் உதவி:

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியானது, வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

முழுவதும் படிக்க : பெண் தொழில் முனைவோர்.. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய அறிவிப்பு.! நிதியமைச்சர் தகவல்.!

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் :

சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதில் கோவையில் ரூ.9,000 கோடி ருபாய் செலவிலும், மதுரையில் 8,500 கோடி ருபாய் செலவிலும் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : ரூ.8500 – 9000 கோடி.! மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்.! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை :

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரும் நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.  வரும் நிதியாண்டு முதல், தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் படிக்க : #BREAKING: செப்.15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் :

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் ரூ.410 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள், உலக முதலீட்டாளர் மாநாடு; பட்ஜெட்டில் அறிவிப்பு.!

ஜவுளிப்பூங்கா :

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான மின்னணு வடிவ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.

முழுவதும் படிக்க : சேலத்தில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா; நிதி அமைச்சர்.!

பொது இடங்களில் இலவச வைஃபை :

சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : பொது இடங்களில் இலவச WiFi வசதி!

1 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் :

பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டில் புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதன்படி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் படிக்க : புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை :

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசின் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முழுவதும் படிக்க : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு

சமையல் எரிவாயு மானியம் :

சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க மற்றும் 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முழுவதும் படிக்க : சமையல் எரிவாயு மானியம், புதிய பேருந்துகளுக்கான திட்டம்…! பட்ஜெட்டில் நிதியமைச்சர்