திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் காலமானதை அடுத்து முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினருமான திருமதி.ஷீபா வாசு அவர்கள் இன்று அதிகாலை உடல்நல குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.
மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல் வீரராகவும் இருந்து சிறப்புற பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் 122-ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.