நாளை 5 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ...!

Holidays have been declared for schools and colleges in 5 districts tomorrow as heavy rains continue.

கனமழை தொடர்வதால் 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுதும் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.