#Breaking:மாணவர்களே...இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Holidays have been declared for schools and colleges in Madurai and Namakkal districts due to heavy rains.

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால்,சாலைகள்,வீடுகள் என மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பது. இதன்காரணமாக பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மாவட்டதில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல,கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.