ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா

Home Minister Amit Shah has laid the foundation stone for the second phase of the Rs 61,843 crore Chennai Metro Rail project.

ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார்.சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின்பு மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.