ஓசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.! திடீரென பரவிய வாயு குறித்து தீவிர விசாரணை.!

By

ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும்  மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் உள்ள கழுவுநீர் தொட்டியில் இருந்து வாயு வெளியாகியுள்ளது.

இந்த நச்சு வாயுவை மாணவர்கள் சுவாசித்த காரணத்தால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது . இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென பரவிய வாயு எவ்வாறு வெளியானது என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Dinasuvadu Media @2023