கனகசபை மீது மக்கள் வழிபடுவதால் தீட்சிதர்களுக்கு எப்படி பாதிப்பு; உயர்நீதிமன்றம் கேள்வி.!

கனகசபை மீது மக்கள் வழிபடுவதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கும் உயர்நீதிமன்றம் கேள்வி.

Kanagasabai MHC

கனகசபை மீது மக்கள் வழிபடுவதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கும் உயர்நீதிமன்றம் கேள்வி.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பொதுமக்கள் வழிபடுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வியெழுப்பினர். நடராஜர் கோயில் கனகசபை மீது மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள், கனகசபை மீது ஏறி மக்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களுக்கு எப்படி பாதிப்பு உண்டாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தீட்சிதர்களுக்கு உரிமை பாதிப்பு என்றால், அவர்கள் தான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கவேண்டும், மூன்றாவது நபர் இதில் எப்படி வழக்கு தொடரலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பி வழக்கை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.