எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது ? ப.சிதம்பரம் கேள்வி

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.

நேற்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.ஆனால் இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என்று வருமானவரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கனிமொழியின் இருப்பிடத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், எதுவும் கிடைக்கவில்லை என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித்துறையினருக்கு எப்படித் துப்பு கிடைக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.