மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.
இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
அதில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 5 மணி நிலவரப்படி 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளது . அதேபோல் மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளது.அதேபோல் அதிகபட்சமாக சிதம்பரம் 70.73 சதவீதம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.