கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளுவது எப்படி ? தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும் வழிமுறைகள்:

இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையை கொண்டு முழுமையாக  சுற்றி வைக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக்  பையின் மேல்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

இறந்தவரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின் அந்த வாகனத்தை முழுமையாக 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும்.

தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் இருக்கும்  பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

இறந்தவரின் முகத்தை உறவினர்கள்  பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்ட வேண்டும். பணியாளர்களை தவிர வேறு யாரும் உடலை கையாள அனுமதிக்கக்கூடாது.

இறந்தவரின் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும் மத சடங்குகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை  குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ அனுமதியில்லை.

தகனம் / அடக்கம் செய்யும் போது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க அனுமதி. குறிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உடலை தகனம் செய்யத பின் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.