மனித கழிவு வாகனம் – ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைப்படுத்த கோரி வழக்கு.

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைப்படுத்த கோரி வழக்கு.

மனித கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றுகிறதா ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, மனித கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி நிர்வாக துறை செயலாளர், விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைப்படுத்த கோரி  தொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 25-ஆம் ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மனித கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள், அதனை நீர் நிலைகளில் வெளியேற்றுவதால் சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளாகுது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.