சிவகங்கை மாவட்டம் கணபதி பட்டியை சேர்ந்தவர், தங்கையா. இவருக்கு மலர் என்ற ஒரு மகன் உள்ளார். மலருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கள்ளம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மலர், தனது கணவர் வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே ஆன நிலையில், தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன்னுடைய நிறம் மட்டும் உடல் அமைப்பை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் கூறி, தன்னை அழைத்து செல்லுமாறு கூறினாள்.
இதனைத்தொடர்ந்து, தங்கையா கல்லம்பட்டிக்கு சென்று மலரை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், தங்கையா வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மலர் தனது கணவரின் கொடுமையால் தற்கொலை செய்யப்போகிறேன் என கடிதம் எழுதி வைத்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த பார்த்த கந்தையா கதறினார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழுதிப்பட்டி காவல்துறையினர், மலரின் உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…