"தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே" – தமிழில் அமித்ஷா ட்வீட்!

after arrives tamilnadu, "I am happy to visit in Tamil Nadu," Union Minister Amit Shah said on his Twitter page in Tamil

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” என மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டப் போது, காரில் இருந்து சாலையில் இறங்கி, சிறிது தூரம் நடந்து சென்று, அங்கிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தார். இந்நிலையில், தமிழகம் வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இருப்பது தனக்கு மகிழ்ச்சியே என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என பதிவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து  நேற்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

unknown node