திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் என்ற சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் 90 அடிக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் 45 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.சுர்ஜித் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரஜினி , ஹர்பஜன்சிங் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் குழந்தை சுர்ஜித் மீட்டு வர வேண்டுமென எனக் கூறியுள்ளனர். தமிழகத்தின் பல கோவில்கள் , மசூதிகள் , சர்ச்சுகளில் பொதுமக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.
unknown nodeஅந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் – சத்யராஜ்..!
Actor #Sathyaraj on #Surjith #SaveSurjeeth ! @DoneChannel1 pic.twitter.com/7pSIKPcuc1