பாஜக, அதிமுக அரசுகளின் போக்கை கண்டிக்கிறேன் – விசிக தலைவர் திருமாவளவன்

Default Image

பாஜக, அதிமுக அரசுகளின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர். இதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தங்களது கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்து, வீடியோ பதிவை பதிவுட்டுள்ளார். அதில், தேர்தல் வகுப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையினர் முக ஸ்டாலின் மகள், மருமகன் இல்லங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இது திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வருமானவரி சோதனைகளால் திமுக கூட்டணியைப் பணிய வைத்திட முடியாது. பாஜக, அதிமுக அரசுகளின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை எல்லாம் தமிழக மக்கள் கவனித்து கொண்டியிருக்கிறார்கள். கட்டாயம் தேர்தலில் இவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பல்வேறு ஊடங்களில் திமுக கூட்டணி 180 முதல் 190 வரையில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக வெளியிட்டு வரும் சூழலில், எரிச்சலுக்கு ஆளாகியிருக்கிற அதிமுக, பாஜககவும் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை கைவிட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்