நடிகர் விவேக் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்.
காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்கள் குழு நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node