இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம் , கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம்!! டி.ராஜேந்தர் அதிரடி!!

This news gives information about If it is running, it's a movement and a longing for the coalition to be dizzy !! T. Rajendra interview

செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் நாங்கள் ஜெயிப்பதற்காக நிற்கவில்லை.

சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம்.

அதிமுக , திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு , அ.ம.மு.க.வின் வேட்பாளர் அறிவிப்பு ஆகியவை நேற்று வெளியானது.மேலும் நேற்று மாலை தி.மு.க வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் டி.ராஜேந்தர் விண்ணப்பம் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் நாங்கள் ஜெயிப்பதற்காக நிற்கவில்லை.சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம்.எனவும்  முன்பு நான் சத்திரியன் இப்போது நான் விவேகமான சாணக்கியன் யோசித்துதான் முடிவு எடுப்பேன்.

மேலும் ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால் அதை ஏற்க மறுத்து விட்டேன். அதிமுக , திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம் , கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் என்று டி.ராஜேந்தர் கூறினார்.