தேவைப்பட்டால் இபிஎஸ்-யிடம் விசாரணை செய்வோம் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

மருத்துவக் கல்லூரிகள் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்.

மருத்துவக் கல்லூரிகள் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்.

கடந்த 2017 – 2021ம் ஆண்டு வரை எடப்பாடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி புகார் எழுந்தது. இந்த சமயத்தில் முறைகேடு தொடர்பாக முகாந்திரம் இருப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த அனுமதியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் முதற்கட்ட விசாரணை துவங்கப்படும் என கூறப்பட்டது. இதுதொடர்பாக இதுதொடர்பாக அதரங்கள் கிடைத்தால் மட்டுமே அவர் மீது லஞ்சஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ளும்என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை செய்வோம் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.