ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்...!

If you buy a bucket of biryani for 750 rupees at a shop in Chennai, 1 liter of petrol is given for free.

சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

நாடு முழுவதும் தற்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறதாம்.

சென்னையிலுள்ள தொப்பி வாப்பா பிரியாணி எனும் கடையில் பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த டோக்கனை கொடுத்து அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கும்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.