ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பு தீ குளிப்போம் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
உயிரிந்தவர்களின் உறவினர்கள் பேட்டி :
unknown nodeதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இந்த பேட்டியில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது வேடிக்கை பார்க்க சென்றவர்களை கூட சுட்டு கொன்றுள்ளனர். இறந்த பிறகு கூட அவர்களது உடல்களை பார்க்க அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு :
unknown nodeஸ்டெர்லைட் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு எதிராக போராடுபவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தான் அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி நீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால், தூத்துக்குடியில் மேலும் பல உயிர்கள் போகும் என்றும், மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பாக தீக்குளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
பொது வாக்கெடுப்பு :
எங்களது உயிர் உள்ளவரை ஆலையை திறக்க விடமாட்டோம். எங்களது குடும்பத்தை சீர்குலைத்த ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என்றும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருப்பதாக கூறினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என முடிவெடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.