சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு படித்துவந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மனைவி பாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட மேலும் இரண்டு பேராசிரியர்கள் கரணம் என பாத்திமா தனது செல்போனில் பதிந்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் என பலரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப், தற்போது செய்தியாளர்களை சந்தித்து பல கருத்துக்களை முன்வைத்தார்., ‘ எனது மகள் தற்கொலை செய்துகொண்டது போல தெரியவில்லை. சிசிடிவி காட்சிகள் கேட்டுள்ளோம் ஆனால் இதுவரை அது எங்களுக்கு தரப்படவில்லை. அவர் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் கயிறு எங்கே? ‘, என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘ எனது மகள் மரணத்திற்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் கரணம். பாத்திமா நன்றாக படிக்க கூடியவர். அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களே எடுத்துள்ளார். பாத்திமா கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவர். அதேபோல தான் தற்போதும் கடிதம் எழுதிவைத்துள்ளார். அவர் தினமும் பேசும்போது, தான் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக கூறியிருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட நாளன்று கேண்டீனில் அழுதுள்ளார்.’ என தனது குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
பின்னர், ‘ இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதியளித்தார்.’ என மறைந்த சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…