மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி செய்துகொண்ட கணவர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டின் அருகேயே சொந்தமாக டீ கடையை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர் தனது மனைவியுடன் இணைந்து காலை முதல் இரவு வரை இருவரும் இணைந்து டீ கடையில் வியாபாரம் செய்துவிட்டு திரும்புவர்.
இந்நிலையில், குமாரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த ஒரு வருடமாக வீட்டிற்குள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்ட போதிலும், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி சோகத்தில், குமார் நேற்று இரவு விஷம் அருந்திவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து இருந்துள்ளார். திடீரென அவர் வாந்தி எடுத்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தான் அவர் விஷம் அருந்தியது தெரிய வந்தது. இதனையடுத்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…