நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக கைதான தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று திருப்பதியில் வைத்து உதித் சூர்யா அவரது தாய் மற்றும் தந்தையை தனிப்படையினர் கைது செய்தனர்.தற்போது விசாரணைக்காக சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டார் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர்.
இந்த நிலையில் புகார் தொடர்பாக கைதான உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.