மக்களவை தேர்தல் : தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் 74610 வாக்குகள் பெற்று 35584 வாக்கு வித்தியாசத்தில் தொடர் முன்னிலை வகுத்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக டிடிவி தினகரன் (அமமுக) 39026 வாக்குகளுடன் பின்னடைவு சந்தித்துள்ளார். மேலும், நாராயணசாமி (அதிமுக) – 20426 வாக்குகளும், மதன் ஜெயபால் (நாதக) – 9793 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் […]
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி […]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று […]
கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை […]
நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. அதேபோல நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை […]
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]
நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் […]
கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தெரியும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து. தேனி லட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் இருந்து கைலாசநாதர் சாலையின் குறுக்கே பாலம் கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எந்த ஒரு திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது. தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என […]
கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), […]
அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்?, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதோடு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நிலை […]
முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. தேனிமாவட்டத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாடான தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்களை தடுத்து நிறுத்தி, தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்குள் செல்லக்கூடாது என்று இந்து முன்னணியினர் மிரட்டியதாகவும், அதே போல, சென்னை பகுதில், அரபி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 8ஆம் வகுப்பு […]
நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]
திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று நெல்லை, […]
தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் உரை. இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில், ரூ.114.21 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடக்கி வைத்தார். ஊஞ்சம்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினர். இதுபோன்று ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்த திட்ட பணிகளை […]
தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து,தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் […]
வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் […]
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 10 வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது காதல் செய்துவந்துள்ளனர். அதன் பிறகு அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்த அந்த சிறுவன், சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமி கர்ப்பமாக்கியது தெரிந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில் குற்றத்தை சிறுவன் […]