#BREAKING: ஷேர் ஆட்டோவில் இப்படி விபத்து ஏற்பட்டால், நிவாரணம் தர முடியாது... அதிரடி உத்தரவு..!

A case was filed in the Madurai High Court branch seeking to stop share autos from violating traffic rules in Madurai.

மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி செயல்படுவதாகவும்  தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. அதில், ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் தர முடியாது.

மேலும், தமிழகத்தில் தற்போது எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன..? விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பின்னர், தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,  மதுரையில் 2016 முதல் 2019 வரை 1,065 ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என  தமிழக அரசு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.