உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சேகர்பாபு பேட்டி.
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக முதல்வர் கிறிஸ்மஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதேபோன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் நமது பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களும் முதல்வரின் அழைப்பின் பேரில், கலந்து கொள்ளவுள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உயர்ந்தவர் தாழ்ந்தவர், இன்னார் இனியவர் என்றில்லாமல் அனைவரும் ஒன்றே. தமிழகத்தை பொருத்தவரை சாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தோடு மக்கள் ஒற்றுமையோடும் என்றும் வாழ விரும்பும் முதல்வர் இன்றைய தமிழக முதல்வர் என்பது நிரூபணமாகிறது.
மேலும் அவரிடம், திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனைத்து செயல்பாடுகளிலும் தமிழக முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே தமிழக முதல்வர் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார். மேலும் மக்கள் பணி சிறப்படைய அவரும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…