பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாக மாதவன், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக அசோக் குமார், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மதிவாணன், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாக புக்யா சினேகா பிரியா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக பாஸ்கரன், விளாத்திகுளம் உதவி எஸ்பியாக ஸ்ரேயா குப்தா பணியிடமாற்றம் செய்யயப்பட்டார்.
மேலும், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சப்-டிவிஷன் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அய்மன் ஜமால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் டிவிஷன் காவல் துணைக் கண்காணிப்பாளராக பிருந்தா, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் துணைப் பிரிவு, உதவிக் காவல் கண்காணிப்பாளராக யாதவ் கிரிஷ் அஷாக், திருவள்ளூர் மாவட்டம், துணைப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தர் சுக்லா, துணைக் காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் துணைப் பிரிவு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பல்வீர் சிங் உள்ளிட்டோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
unknown node