சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை.!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினரால் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் இல்லாத வருமானம் போன்ற புகார்கள் வந்ததின் அடிப்படையில் இன்று வருமான வரித்துறையினர் சென்னையின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.